திருமணம், மரண சடங்கு உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடு! வருகிறது புதிய சுகாதார நடைமுறை, இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தவும் ஆலோசனை...
நாட்டில் 1ம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு இருக்கும் எனவும் அது தொடர்பான சுகாதார வழிகாட்டல் 1ம் திகதி தொடக்கம் அமுலாகும். எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் விழாக்களை வீடுகளில் மட்டுமே நடத்த அனுமதிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இறுதிச் சடங்குகள் மற்றும் பல பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு ஒக்டோபர் முதலாம் திகதி நாடு மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்திருந்தார்.
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டை மீண்டும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்.