கட்டம் கட்டமாகவே திறக்கப்படும்..! மக்கள் சடுதியாக ஒன்று திரள்வதால் உருவாகும் பேராபத்தை தடுக்க அதுவே வழி என்கிறார் இராணுவ தளபதி..
அக்டோபர் மாதத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதே அடுத்த சில மாதங்களில் நாடு எவ்வாறான நிலையில் காணப்படும். என்பதை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாட்டை மீண்டும் திறந்தவுடன் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முழுமை யான திட்டம் தயாராகி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
நோயாளர்கள் உயிரிழப்புகள் பெருமளவிற்கு குறைவடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். பெருமளவு மக்கள் ஒன்றுதிரள்வதால் மீண்டும் புதியபரவல் ஆரம்பமாவதை தடுப்பதற்காக கட்டம்கட்டமாக திறக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முதலாம் திகதி மீண்டும் திறந்தால் அதன் பின்னர் மக்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பது முக்கியமான விடயம் எனவும் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.