நாடு மீள திறக்கப்படுவது தொடர்பாக இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு! அடுத்த 3 மாதங்களுக்கு சுகாதார நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும்..
நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாடு திரும்பிய பின்னர் ஆலோசனை பெறப்படும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட்ட-19 தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மக்கள் மேலும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் இராணுவத்தளபதி இதன்போது கேட்டுக்கொண்டார். அத்தோடு, புத்தாண்டு உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும்
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அப்படி இல்லையெனில் மீண்டும் கொரோனா அலை நாட்டில் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நாட்டின் கொரோனா நிலைமை
திருப்தி கொள்ளும் அளவிற்கு குறைந்து வருவதாக தெரிவித்த இராணுவத்தளபதி, எதிர்வரும் 3 மாதங்களில் மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாடு மீள திறக்கப்படும்போது
சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமையெனவும், தற்போது மக்கள் தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்தாகவும் இராணுவத்தளபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.