200 மாணவர்களுக்கு குறைப்பான பாடசாலைகளை அக்டோபர் 2ம் வாரத்தில் திறக்க திட்டம்..! கொழும்பு ஊடகங்கள் தகவல்..
200ற்கும் குறைந்தளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் இவ்வாறு பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர்,
அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமென முன்னதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.