கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் நரம்பியல் நோய்கள்! 3 வீதம் முதல் 40 வீதமானோரை பாதிக்கிறதாம்..
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 3 வீதம் முதல் 40 வீதமானோருக்கு நரம்பியல் நோய் அறிகுறிகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நரம்பியல் நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் காமினி பத்திரண, நரம்பியல் நோய் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் மருத்துவரைப் நாடுவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.
வைத்திய நிபுணர் காமினி பத்திரண மேலும் கருத்து தெரிவிக்கையில், சமூகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நோய் அறிகுறிகள் வந்தால் அறிந்துக் கொள்வதற்காக இதனை தெரிவிக்கின்றோம்.
இந்த அறிகுறிகளைப் பற்றி கேட்டு அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு தெரியும், பெல்ஸ் ஃபால்ஸ் என்ற நோய் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முகத்தின் ஒரு பக்கம் உணர்ச்சியற்றதாக மாறும்.
இந்த நாட்களில் இது மிகவும் அதிகரித்துள்ளது. கொவிட் -19 காரணமாக இது ஏற்படுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் 3% முதல் 40% வரை நரம்பியல் நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது என்றார்.