தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வரலாம்! தீவிரமாக ஆராய்கிறது அரசு..
தடுப்பூசி அட்டையில்லாம் வெளியே செல்வதை தடுப்பது தொடர்பாக அரசு தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பான சட்ட நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியான அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதன் பின்னர் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும்
எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தடுப்பூசி செலுத்தாமல் வீடுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு
தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.