SuperTopAds

இலங்கையின் உள்ளக பிரச்சினையை உள்ள பொறிமுறையின் ஊடாக தீர்க்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு..! ஐ.நா பொதுச் செயலாளருடனான சந்திப்பின் பின் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் உள்ளக பிரச்சினையை உள்ள பொறிமுறையின் ஊடாக தீர்க்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு..! ஐ.நா பொதுச் செயலாளருடனான சந்திப்பின் பின் ஜனாதிபதி..

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும். என ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் ஜனாதிபதியிடம் தொிவித்துள்ளார். 

மேலும் காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் 

மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸிடம் தெரிவித்துள்ளார். 

ஐ.நா சபையின் பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது கருத்துரைத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பலர், 

தாம் ஆட்சிக்கு வந்தமையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை நாட்டின் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்த்து கொள்ள முடியும் எனவும் அதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுவதற்காக 

அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.