மதுபானசாலைகள் திறக்கப்பட்டது எவ்வாறு? தொடங்கிய இடத்திற்கு நாடு திரும்பபோகிறது, சுகாதார அமைச்சு எச்சரிக்கை..
மதுபானசாலைகளை திறக்கும் தீர்மானம் சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில்,
குறிப்பாக மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதில் எந்த அடிப்படை நோக்கமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் சுகாதார அமைச்சு மது விற்பனையை ஊக்குவிக்காது, மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் ,
மதுபானக் கடைகளுக்குள் சுகாதார ஊழியர்களை அனுமதிக்கவும், அதற்கேற்ப கூட்டத்தை கையாளவும் அனுமதிக்க முடியாது,
ஏனெனில் இது சட்ட அமலாக்கத்தின் பொறுப்பாகும். பெரும்பாலான முடிவுகள் சுகாதாரத் துறைக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையேயான ஒரு பொறிமுறையால் எடுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த விடயத்தை கையாளும் அதிகாரிகள் பொலிஸார் மற்றும் கலால் துறைகள் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுபானக் கடைகளை மீளத் திறப்பது தொடர்பான முடிவுகள் பொதுவாக சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் என்றார்.
எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால், மக்கள் இப்படி ஒன்று கூடினால், நாங்கள் தொடங்கிய இடத்திற்குத் திரும்புவதைத் தவிர
வேறு வழியில்லை என தான் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.