ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ!

ஆசிரியர் - Admin
ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ!
களுவாஞ்சிகுடி – தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த சாரதி உயிர்த் தப்பியுள்ளார்.

அயலவர்களினால் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட போதும் குறித்த மோட்டார் சைக்கிள் பகுதியளவில் கருகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவின் காரணமாகவே இத்தீ விபத்து இடம்பெற்றது என குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி தெரிவித்தார்.