ஊரடங்குச் சட்டத்தை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்பு..!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.
குறித்த தகவலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருக்கின்றது. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக
ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் 01 அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கை
கண்டிப்பாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.