SuperTopAds

G.C.E A/L மற்றும் G.C.E O/L தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
G.C.E A/L மற்றும் G.C.E O/L தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது..

க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதிகளை கல்வியமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ளார். 

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் 14 ஆம் திகதியும் ,உயர்தர பரீட்சையை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதியிலிருந்து மார்ச் 3 ஆம் திகதி வரையும்

நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கருத்துக்களை அறிந்து ,மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே செயலாளர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.