SuperTopAds

13ம் திகதி நாட்டை திறந்தாகவேண்டும்! 45 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியில், முடக்கம் நீடித்தால் நிலமை மோசமாகும்..

ஆசிரியர் - Editor I
13ம் திகதி நாட்டை திறந்தாகவேண்டும்! 45 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியில், முடக்கம் நீடித்தால் நிலமை மோசமாகும்..

நாட்டை எதிர்வரும் 13ம் திகதி திறந்தே ஆகவேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும் என கூறியிருக்கும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இப்போது திறந்திருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் நாடு திறக்கப்படாவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். 

நாட்டிலுள்ள 45 இலட்சமான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடு முடக்கப்படுமானால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்” என்றார். 

மேலும் நாடு மூடப்பட்டதன் காரணமாக நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபாவை அரசு இழந்து வருகிறது. எனவே 10 நாட்கள் மூடப்படும் போது சுமார் 150 பில்லியன் ரூபாவை இழப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.