6ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? உடனடி முடிவுகளை எடுக்க முடியாது என்கிறார் இராணுவ தளபதி..
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும்,
அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.