நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!
மக்கள் தங்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பகுதிக்குள் அல்லது தமது சொந்த கிராம அலுவலர் பிரிவிற்குள் மட்டுமே தடுப்பூசியை பெறுமாறு இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பல தடுப்பூசி மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள்
சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.நாட்டின் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்றுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 73 ஆயிரத்து 120 ஆகும்.