கே.ஆர்.பி. அணை மதகு திடீரென உடைந்தது.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.பி. அணையில் மதகு திடீரென உடைந்து அளவுக்கு அதிகமான நீர் வெளியேறி வருவதால் 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் உள்ள கே.ஆர்.பி. அணையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இன்று மாலை திடீரென ஒரு மதகு துருப்பிடித்து உடைந்தது.
இதிலிருந்து தண்ணீர் அளவுக்கதிமாக வெளியேறி வருகிறது. இதனையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.