வீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை, பயணத்தடை பெயருக்கு மட்டுமே என சாடல்..
நாட்டில் உருவான 1ம், 2ம் கொரோனா அலைகளில் காணப்பட்டதை விடவும் 3ம் அலையில் உயிரிழப்பு அதிகம் என சுட்டிக்காட்டியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,
3வது அலையில் முதியவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இது குறித்து அரசமருத்தவ சங்கத்தின் செயலாளர் செனால் பெர்ணாண்டோ மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா வைரசினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 60 வீதமான மரணங்கள் கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழ்ந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.வைரஸ்தொற்று அச்சம் தரும் வேகத்தில் காணப்படுகின்றது.
என தெரிவித்துள்ள அவர் இதுவரை கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 58 வீதமானவை இந்த அலையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான நிலைமை என அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 73 முதல் 75வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால் வைரஸ் எங்கள் வீடுகளிற்குள் நுழைந்துள்ளது என்பதே என குறிப்பிட்டுள்ள அவர்
முதலாவது இரண்டாவது அலைகளில் வீடுகளில் உயிரிழப்புகள் இவ்வளவு தூரம் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 90வீதமான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவே போக்குவரத்து தடைகள் நடைமுறைக்கு வந்தன
ஆனால் ஆனால் அவற்றால் 60 வீதம் மாத்திரம் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.