SuperTopAds

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.

அதன் பின்னர் சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆயிரத்து 400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது. இன்று பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்து தினமும் கொழும்பு நோக்கி தனியார் விமான பயண சேவைகள் நடைபெற உள்ளது.

நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருடன் ஏறாவூர் நகர சபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களான நழீம் ஹாஜி மற்றும் ரியாழ், ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.