SuperTopAds

இலங்கையின் மேலும் ஒரு பகுதிக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டது..! 64 குடும்பங்கள் முடக்கப்பட்டன..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் மேலும் ஒரு பகுதிக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டது..! 64 குடும்பங்கள் முடக்கப்பட்டன..

குருநாகல் மாவட்டத்தல் கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதிக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தித்தவெல்காய பகுதியில் 29 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நாரத ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அப்பகுதியில் 70 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

64 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கணேவத்த சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.