வரி விதித்த ட்ரம்புக்கு சவால் விடும் சீனா
தங்கள் நாட்டு பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள முடிவை அந்நாடு கைவிட வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்க ஜனாதிபதி 60பில்லியன் டொலர்கள் வரை வரி விதித்துள்ளார். ட்ரம்ப் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை வெள்ளை மாளிகை அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் அமைந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் அமெரிக்காவின் வரி அதிகரப்பை நிறுத்துமாறு கூறுகிறோம். அமெரிக்காவின் இந்த முடிவு இருதரப்பு உறவையும் காயப்படுத்தும். இந்த வார்த்தக போரை கண்டு பயம் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி உயர்வைக் கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள சீன அமைச்சகம், அமெரிக்க பொருட்களுக்கு மூன்று பில்லியன் டொலர்கள் வரை வரி விதிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
அவ்வாறு சீனா இறக்குமதி வரியை அதிகரித்தால் அமெரிக்காவின் பழங்கள், வைன் மற்றும் ஸ்டீல் பைப்புகள் ஆகியவை சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.