பல மாதங்களுக்கு பின்னர் மெல்பனில் தரையிறங்கிய முதலாவது இலங்கை விமானம்
பல மாதங்களுக்கு பின்னர் அவுஸ்ரேலியா விக்டோரியா பிராந்தியத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் ஸ்ரீ லங்க விமான சேவையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து புறப்பட்ட UL 604 விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 04.20 அளவில் மெல்பன் சர்தேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதில் சென்ற அனைத்து பயணிகளும் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக சிங்கபூர், டோகா, அபுதாபி, டுபாய் ஆகிய நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் இன்றைய தினம் மெல்பன் விமான நிலையத்தில் தரையிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.