சாரதி மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்த்தர் அதிரடியாக கைது..
கொழும்பு - பன்னிப்பிட்டிய பகுதியில் பாரவூர்தி சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொளி வெளியான நிலையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இன்றைய தினம் அவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். மேற்கண்ட பொலிஸ் உத்தியோகத்தர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்யை தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை எழுப்பியிருந்தது.
இந் நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,
தாக்குதலுக்குள்ளான லொறியின் சாரதி தற்சமயம் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.