பொதுமகன் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்..! சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் சார்ச்சை, அதிகாரி பணி இடைநீக்கம்..
பன்னிப்பிட்டிய பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கிய மகரகம போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.
கடமையில், சீருடையுடன் இருக்கும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வீதியில் பொதுமகன் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தொிவிக்கையில் பொலிஸ் அதிகாரி பொதுமகன் ஒருவரை தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
என அவர் கூறியுள்ளார்.