புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு (யூகே), உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.