யாழ்.இளைஞன் வெளிநாட்டில் செய்த சாதனை: ஹீரோவாக்கிய அந்நாட்டு ஊடகம்!
இலங்கையில் நடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது நியூசிலாந்தில் வாழும் ஈழத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலரை ஊக்கப்படுத்தும் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த அன்ட்ரூ பாலரஞ்சன் என்ற இளைஞன் தொடர்பான செய்தியே வெளியாகி உள்ளது.
அன்ட்ரூ பாலரஞ்சன் தனது சிறு வயதில் துப்பாக்கிகளுக்கு அஞ்சி, சித்திரவதைகளில் இருந்து தப்புவதற்கு பதுங்கு குழிகளில் மறைத்திருந்த காலங்களை இன்னமும் நினைவில் வைத்துள்ளார்.
33 வயதான பாலரஞ்சன் யாழ்ப்பாணத்தில் பிறந்து, சிவில் யுத்தத்தின் காரணமாக அச்சத்துடனேயே வாழ்ந்த ஒருவராகும்.
ஒரு குழந்தையான நான் வளர்ந்து வருகையில், யுத்தத்தின் உண்மைகளைச் சுற்றி என் தலையை மூடிவிட முடியாது. என்ன நடக்கும் என்று எனக்கு எப்போதும் பயமாக இருந்தது, ஏனெனில் அது என்னை பாதித்தது என பாலரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தந்தை கொழும்பில் பணி புரிந்து கொண்டிருந்த போது, அவரது தாயார் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளுடன் பாலரஞ்சன் வாழ்ந்தார்.
தான் வசித்த பகுதியில் உள்ளவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது, தங்கள் வீட்டின் வழியாக படையினர் நடந்து சென்றது மற்றும் வெடிகுண்டுகளின் போது பாதுகாப்புக்கு எதிராக போராட வேண்டியிருந்தது என அனைத்தையும் பாலரஞ்சன் நினைவுபடுத்துகிறார்.
ஒரு பொதுவான சூழ்நிலையில் குண்டு வீசப்படும், எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பதுங்கு குழி அல்லது பாதுகாப்பான அரண் இருந்தது.
நாங்கள் வாழ்வா சாவா விளையாட்டை விளையாடினோம். நான் என் அம்மாவிடம் எந்த நேரத்தில் நாங்கள் கொல்லப்படுகிறோம்? என்ற கேள்வியை கேட்டேன். அது இன்னமும் நினைவில் உள்ளது.
1990ஆம் ஆண்டுகளின் மத்தியில், யாழ்ப்பாணம் குண்டுவீச்சுகளுக்கு இலக்காக மாறியது. கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு வழியில்லாமல் இருந்தோம். பாதுகாப்பிற்காக கையில் கிடைத்ததனை எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
யுத்த வலயத்தை விட்டு வெளியேற நாம் எடுக்கும் முயற்சியில், திருமணம், பிறந்தநாள், போன்றவற்றை நினைவுகூறும் புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்கள் போன்ற முக்கிய குடும்ப நினைவுச் சின்னங்களை நாங்கள் விட்டுவிட்டே சென்றோம். இப்போது அவை எனக்கு தொலைதூர நினைவுகளாக உள்ளது.
பாலரஞ்சனின் குடும்பம் பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க பல மைல் தூரம் தண்ணீர் இல்லாமல் செல்ல நேரிட்டது. பல மணி நேரங்களைக் கடக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அது மிகவும் கொடூரமான யுத்த பகுதியாக காணப்பட்டது.
ஒருவழியாக குடும்பத்தினர் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கே குடிசைகளில் தூங்கினர், குறைந்த அளவிலான உணவுகளை பெற வேண்டியிருந்தது.
பாலாரஞ்சனின் தந்தை வடக்கிற்கு பயணித்து, குடும்பத்தை பாதுகாக்கும் வரை, அவர்கள் இந்த நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
“நான் தந்தையை பல ஆண்டுகளாக பார்த்ததில்லை, ஆனால் அவர் பாதுகாப்பாக இருந்தார், உண்மையில் நம்மை அவர் பாதுகாப்பாக வெளியேற்றினார்.” என பாலரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளைக் கண்டுபிடித்த போது பாலரஞ்சனின் வயது 11 ஆகும்.
அந்த இடம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இரவில் நான் தூங்குவதற்கு இன்றும் கடினமாகவே உள்ளது. ஏனெனில் குண்டுவீசி மற்றும் ஹெலிகொப்டர் சத்தங்களுக்கு அஞ்சி பழக்கப்பட்டுவிட்டேன்.
அதனை தொடர்ந்து ஒன்பது மாதங்கள் கழித்து எனது குடும்பம் நியூசிலாந்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது, ஆக்லாந்து நாட்டில் ஏற்கனவே பாட்டி மற்றும் அத்தை இருந்தனர் அவர்களின் உதவியில் இந்த வாழ்க்கை கிடைத்தது.
“நான் என்ன செய்தேன் அல்லது ஒரு விமானம் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது” என பாலா ரஞ்சன் கூறினார்.
இது எனக்கு வெளிநாடு. எனக்கு ஆங்கிலம் பேசக்கூட முடியவில்லை. வாழ்க்கையை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல், ஒரு பெட்டியை எடுத்து கொண்டு அகதிகளாக நியூசிலாந்திற்கு வந்தோம்.
ஒரு வெளிநாட்டிற்கு செல்வதென்பது மூளையை புதுப்பிப்பது போல இருந்தது. நான் ளுநடறலn கல்லூரியில் மூன்றாவது வகுப்பு படிப்பைத் தொடங்கினேன், எனக்கு மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
என்னால் பேசமுடியவில்லை, நான் உணர்ந்ததையோ அல்லது நான் என்னவெல்லாம் சொல்ல நினைக்கின்றேன் என்பதையோ என்னால் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை.
நான் மிகவும் பயந்தேன் என மதிய உணவு நேரத்தில் மறைந்திருப்பேன். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகுப்புகளுக்கு சென்றேன். இது ஒரு சோதனை நேரமாக இருந்தது. எடுத்துக் கொள்ளும் அனைத்து சிறிய விடயங்களும் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
கடினமான காலங்களிலிருந்தும், மத விசுவாசத்திலிருந்தும், மக்களின் உதவியிலும் நான் ஊக்குவிக்கப்பட்டேன்.
இளைஞனாக எனக்கு உதவி கிடைக்க வழி இல்லை, ஏனென்றால் என்னை வெளிப்படுத்த முடியவில்லை, அதனால் நான் பல வருடங்களாக பலவற்றை சமாளிக்க என்னால் முடிந்ததை செய்தேன்.
எங்களுடைய குடும்பத்தினருக்கு, தேவாலயம் மற்றும் நண்பர்கள் தேவையான ஆடை, உணவுகளை நன்கொடை அளித்தார்கள்.
மக்கள் செய்த சிறிய விடயங்கள் எனக்கு பெரிய விடயங்களாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எனக்கு அன்பளிப்பு, கருணை, இரக்கம் கொடுத்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இன்று இங்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் பாலரஞ்சன் பாடசாலை கல்வியை விட்டுவிட்டு ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் முறைமைகளைப் படிக்கத் தொடங்கினார்.
அவர் தற்போரு ஒரு சர்வதேச நிறுவனத்தின் ஒரு மூத்த மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார், மேலும் அவரது கதையையும் அனுபவத்தையும் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துகிறார்.
எனது கதை சரியாக குரல் இருக்க வேண்டும் மற்றும் என் கதை பலர் முன்னேற உதவும்.
விசுவாசத்தின் செய்திகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு ஐளெவயபசயஅ பக்கம் அவருக்கு உள்ளது, அதன் மூலம் பலரை அவர் ஊக்கப்படுத்துகின்றார்.
“என் வார்த்தைகளால் மக்களை ஊக்குவிப்பேன், ஏனென்றால் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது”.. எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.