அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வ ஆரம்பம்
இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(19) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் “தேசத்தின் வேர்கள்” அமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழ்வில் அம்மையாரின் நினைவாலயத்தில் ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இரு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988 மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம்- 19 ஆம் திகதி வரை ஒரு மாதகாலம் உணவுதவிர்ப்புப் போராட்டம் நடாத்தி அம்மையார் உயிர் நீத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.