10 நாடுகள், 40,000 கி.மீ தூர சாசக பயணம்; ஒற்றைச் சைக்கிளில் இரட்டை பயணம் மேற்கொண்ட ஜோடி
இத்தாலியைச் சேர்ந்த இருவர், 10 நாடுகளுக்கு சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி லெஸ்ஸன்ட்ரோ(31). அவரது மனைவி செய்ஃபானியா(30) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் டேண்டம் சைக்கிள் எனப்படும், இரட்டை மிதிப்பான்கள் கொண்ட சைக்கிளில் சாகசப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
முதலில் இத்தாலியில் பயணத்தைத் தொடங்கி, குரோஷியா, கிரீஸ், துருக்கி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, இந்தியா வை வந்தடைந்துள்ளார். சீனாவில் இருந்து கப்பல் மூலம் கொச்சி வந்து சேர்ந்தனர்.
அங்கு மூணாருக்கு சென்ற ஜோடி, பின்னர் மதுரை, ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வந்தனர். தங்கள் பயணத்தில் 10 நாடுகளின் 40,000 கிமீ தூரத்தைக் கடந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 100 முதல் 130 கி.மீ தூரம் பயணிக்கின்றனர்.