SuperTopAds

உறைய வைக்கும் குளிரில் ஐஸ்ரோ பெண் விஞ்ஞானியின் சாதனை

ஆசிரியர் - Admin
உறைய வைக்கும் குளிரில் ஐஸ்ரோ பெண் விஞ்ஞானியின் சாதனை

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் இந்தியப் பெண் விஞ்ஞானி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

56 வயதான மங்கள மணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த பெண் விஞ்ஞானி. இவர் தென் துருவத்தில் உறைபனிச் சூழல் நிலவும் அண்டார்டிகா கண்டத்தில், இஸ்ரோவின் பாரதி விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்.

403 நாட்களுக்கு மேலாக அங்கே தங்கிய அவர் அதிக நாட்கள் அண்டார்டிகாவின் நடுக்கும் குளிரில் வசித்த இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு 23 பேர் கொண்ட குழு அண்டார்டிகாவில உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இந்த குழுவில் தேர்வாவதற்கு முன் நடைபெற்ற உடல்தகுதிச் சோதனைக்காக மிகவும் கனமான உடைகள் அணிந்து கனத்த பைகளையும் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் மங்கள மணி. 

அதுவும் அண்டார்டிகாவில் நிலவும் பனிமயமான சூழலில் தாக்குப்பிடிக்க முடிகிறதா என்று சோதிக்கும் நோக்கில் பனிப்பிரதேசமான பத்ரிநாத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மங்கள மணி தனது பணியையும் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.