வரலாற்றின் பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள்! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்
தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின் மூலம் உணர்ந்தவர்களாகவே மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களின் தியாகங்கள் என்றும் வீணாகிப்போய்விடாது என்ற நம்பிக்கையினை எமக்குள் நாமே ஆழமாக வரித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஒன்றுபட்ட மக்கள்திரளுக்கு மாபெரும் சக்தி உண்டு. எமது செயற்பாடுகள் எமது மாவீரர்களுக்கும், சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கும் நீதியினைப் பெற்றுத் தரும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரவித்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முழுமையான மாவீரர் நாள் செய்தி :
இன்று மாவீரர் நாள். நம் தேசத்தின் புதல்வர்களின் திருநாள்.
நமது தேசத்தினதும் மக்களதும் விடுதலைக்காய் களமாடி விதையாய் வீழ்ந்த எமது மண்ணின் வீரவித்துக்களை நினைந்துருகி, அனைத்துலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்தும் நாள்.
ஈகத்தின் இலக்கணமாக உலகப்பரப்பெங்கும் தம்மை அடையாளப் படுத்தியதன் மூலம் உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளை அவர்கள் மனதில் விதைத்த தமிழீழத் தேச வீரர்களின் பெருநாள்.
மாவீரர்கள் எமது தேசத்தின் பாதுகாப்புக் கவசமாக இருந்தார்கள். மக்களதும் மண்ணினதும் விடுதலை வேட்கையின் குறியீடுகளாக விளங்கினார்கள்.
தாம் படைக்க எண்ணிய புதிய சமுதாயத்தின் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டி, ஏற்றத்தாழ்வுகளற்ற, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றைத் தமிழர் தாயகப்பகுதியில் கட்டியெழுப்பும் தேசச்சிற்பிகளாகச் செயற்பட்டார்கள்.
மாவீரர்நாளும், மாவீரர் துயிலும் இல்லங்களும் சமத்துவத்தின் குறியீடாக விளங்குகின்றன. தாயக தேசத்தின் விடுதலைக்காய் உயிர் ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் சமமாக மதித்து அவர்களை எமது மக்கள் தத்தமது இதயக்கோவிலில் வைத்து வணங்கும் நாளாக மாவீரர் நாள் இருக்கிறது.
மூத்த போராளியென்றோ, புதிய போராளியென்றோ, ஆண், பெண் என்றோ, வயதில் மூத்தவர் இளையவரென்றோ வேறுபாடுகள் எதுவுமின்றி, சமூகத்தில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, தேசத்தின் விடுலைக்காய் வீழ்ந்த அனைத்து புதல்வர்களையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் நமது தேசம் போற்றும் நாளாக மாவீரர் நாள் இருக்கிறது.
இன்றைய மாவீரர் நாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களோடு இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் எமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது.
அன்பான மக்களே!
மாவீரர்கள் தமிழீழ மக்களுக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு தமிழர் தாயகப்பிரதேசங்களில் அமைக்கப்படுவதனைத் தமது அரசியல் இலக்காகக் கொண்டே தம் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.
தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் வாழ்வதற்கு ஏற்றதோர் அரசியல் ஏற்பாடாகத் தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின் மூலம் உணர்ந்தவர்களாகவே அவர்கள் களமாடினார்கள்.
நமது மாவீரர்கள் தேசிய வீரர்களாகவே இருந்தார்கள். தேசிய வெறியர்களாக அவர்கள் என்றும் இருந்ததில்லை. எமது மக்களின் விடுதலைக்காய் எமது தாயகப்பிரதேசங்களை மீட்டெடுப்பதற்காகவே அவர்கள் போராடினார்கள். ஏனைய தேசங்களை ஆக்கிரமிப்பதற்காக அவர்கள் என்றும் போராடியதில்லை. எமது மக்களை இன அழிப்பில் இருந்து பாதுகாக்கவே அவர்கள் போராடினார்கள். இனவழிப்புக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் மாவீரர்களின் போராட்டம் மிக முற்போக்கானது. உலக மக்களது விடுதலைக்கும் வழிகாட்டக் கூடியது.
மாவீரர்களின் நீண்ட போராட்டம் காரணமாக எமது தேசம் தனது சிறப்பை உணர்ந்து ஒரு வலுவுள்ள தேசமாக அணிதிரளத் தொடங்கியது. ஒரு சிறிய தேசமாக இருந்த போதும் உலகப்பரப்பெங்கும் தன்னை நோக்கிய கவனத்தை ஈர்த்துக் கொண்ட தேசமாக ஈழத் திருநாடு விளங்குவதற்கு மாவீரர்கள் காரணமாக இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் அனைத்துலகக் கவனத்தை ஈர்ப்பதற்கும் மாவீரர்களின் போராட்டமே வழிகோலியது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் மாவீரர்களின் ஈகம் நிறைந்த போராட்டமே காரணமாய் அமைந்தது.
1950களில் சிங்களம் ஆரம்பித்த தமிழின அழிப்புத் திட்டத்தை மாவீரர்களின் போராட்டம் நெருக்கடிக் குள்ளாக்கியிருந்தது. மாவீரர்களின் போராட்டம் முகிழ்த்தெழுந்திருக்காவிடின் சிங்களம் தனது தமிழினவழிப்புத் திட்டத்தில் இற்றைக்குக் கணிசமான தூரம் முன்னேறியிருக்கும். 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தின் பின்னர் திட்டமிட்ட வகையில் சிங்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டம் இதனை உய்த்துணர வைக்கிறது.
மாவீரர்களின் கனவை நனவாக்கும் இலக்குடனேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கொள்கையினை வகுத்துக் கொண்டது. 2010 ஆம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் உருவாக்கிய போது மாவீரர்களை மனதில் இருத்தியே அதனை உருவாக்கிக் கொண்டோம். அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான செயற்பாடுகளை அனைத்துலக அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. ஜனநாயகவழியில், அரசியல், இராஜதந்திர ரீதியிலான போராட்ட முன்னெடுப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனித்துவமான அணுகுமுறையாக உள்ளது.
அரசியல் இராஜதந்திர வழிமுறைகளென்பவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை. அரசியற் செயற்பாடுகளின் ஊடாக நாம் திரட்டிக்கொள்ளும் வலு நமக்கு இராஜதந்திர வழிமுறைக்குக் கூடுதல் வாய்ப்பைத் திரட்டித் தரும். நமது வலு அதிரிக்க அதிகரிக்க நாம் அனைத்துலக வலுச்சமன்பாட்டுக் கணக்கில் கணிப்பிடப்பட வேண்டியவர்களாக மாறுவோம்.
ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்று, தமிழ