ஜெயலலிதா வாரிசுக்கு வந்த சோதனை.. அய்யோ பாவம்.!
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் தான் உண்மையான ஜெயலலிதா வாரிசு, எனவே அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், இது சம்பந்தமாக கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவர் தான் உண்மையான வாரிசு என மனுத்தாக்கல் செய்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.