SuperTopAds

உக்ரைன் சுற்றுலா பயணிகளால் 27 சபாரி வாகன சாரதிகள் கட்டாய தனிமைப்படுத்தலில்..! அதிகாரிகளின் அசமந்தம் என சாரதிகள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I

உக்ரைன் நாட்டிலிருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளை யால தேசிய பூங்காவுக்கு அழைததுச் சென்றிருந்த சபாரி வாகன சாரதிகளை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 

குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தமக்கு முன்பதாக அறிவிக்கப்படாத ஒன்று எனவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவும் சாரதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இந்த தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை அவர்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்க மாட்டோம் என்றும், 

14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை 27 சாரதிகளை இவ்வாறு தனிமைப்படுத்த அரசு பணித்துள்ளது.