கொதிகலன் வெடித்து விபத்து..! இந்திய பிரஜை ஒருவர் பலி, பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..
இரும்பு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொட்டதெனியாவ பகுதியில் இன்று இடம்பெற்றிருக்கின்றது. இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்ததிலேயே குறித்த நபர் உயிழிந்துள்ளார்.
குறித்த விபத்தில், மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.