தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை ஆஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கம், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பிரியாவின் இணைப்பு நுழைவிசைவு கடந்த மார்ச் 4ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அதனை நீடிப்பதற்கு எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், நடேசலிங்கம் அவரது மனைவி பிரியா, அவர்களது இரண்டு குழந்தைகளை நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்தது. கடந்த திங்கட் கிழமை, பிலோலா நகரிலுள்ள அவர்களது வீட்டிலி ருந்து நடேசலிங்கத்தை தனியான வாகனத்திலும், பிரியாவையும் அவரது இரண்டு குழந்தைகளை யும் மற்றொரு வாகனத்திலும் பொலிஸார் மெல் பேர்ண் நகர தடுப்பு முகாமுக்கு ஏற்றிச் சென்றனர்.
பிரியாவும் அவரது இரண்டு குழந்தைகளும் ஒரே வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டாலும், குழந்தைகள் தாயுடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை.
இருவரையும் தனித் தனியாகச் சிறை வைத்த பின்னர், அவர்கள் சுய விருப்பின் அடிப்படையில் நாடு திரும்புவதற்கான ஆவணங்களில் ஆஸ்திரேலியப் பொலிஸார் கையெழுத்து வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.