கால நிலை திடீர் மாற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

ஆசிரியர் - Admin
கால நிலை திடீர் மாற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

கால நிலை திடீர் மாற்றம் காரணமாக நாட்டில் கரையோர பிரதேசங்களிலுள்ள மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து காலநிலைய அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும். நாட்டில் மேல், தென், கிழக்கு, தென்கிழக்கு கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையில் அதிகரித்துக் காணப்படும்.

எனவே 48 மணிநேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். இதன்போது கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்பதால் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்வோர் அவதானமாக செயற்பட வேண்டும்

மேலும் இந்த காலத்தில் காற்றின் வேகம் திடீர் என அதிகரிக்கவும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து கொள்வதோடு, நாட்டு மக்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறுமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு