அதிவேக ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு சவால் விட்ட ரஷியா.!

ஆசிரியர் - Editor II
அதிவேக ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு சவால் விட்ட ரஷியா.!

ரஷியா ‘கின்ஷால்’ எனப்படும் அதிவேக ஏவுகணையை தயாரித்துள்ளது. இது ஒலியை விட 10 மடங்கு வேகமாக பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது.

இந்த ஏவுகணையை ரஷியா நேற்று பரிசோதித்தது. ‘மிக்-31 சூப்பர் சோனிக்‘ தடுப்பு ஜெட் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

முடிவில் இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ரஷியாவின் தெற்கு ராணுவத்தில் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் வருகிற 18-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் புதின் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெறும் நிலையில் கடந்த வாரம் ‘கின்ஷால்’ ஏவுகணை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இது அதிநவீன முழு திறன் படைத்த ஆயுதம் என புதின் வர்ணித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு