வீதியில் படுத்துறங்கிப் போராட்டம் நடத்திய எம்.பி!
நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நடு வீதியில் படுத்துறங்கி நடத்திய போராட்டம் மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.ரி.எம். முத்தாலிப் அவர்களின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எம்.ரி.எம். முத்தாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொலிஸ் ஆணைக்குழுவின் முடிவு கிடைக்கும் வரை தான் விடுமுறையில் செல்வதாக அதிகாரி தெரிவித்ததை அடுத்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் முன்னாள் இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் ஆனந்த அளுத்கமகே போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். இதனால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.