SuperTopAds

கட்டுப்பாடற்று அதிகரிக்கும் கொரோனா..! 18 ஆயிரத்தை கடந்தது மொத்த எண்ணிக்கை, நேற்று மட்டும் 398 நோயாளர்கள், 5 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இதன்படி நேற்று மட்டும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவர்கள் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். 

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 404 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 12 ஆயிரத்து 210 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 801 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேபோல் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் மற்றும் தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.