2800 படுக்கைகளுடன் மேலும் பல வைத்தியசாலைகளை தயார் செய்கிறது சுகாதார அமைச்சு..! காரணம் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சுமார் 2800 படுக்கைகளுடன் மேலும் பல வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, அடையாளம் காணப்பட்ட வைத்தியசாலைகளில் 2,800 கட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும்,
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலதிக தேவையேற்படின், குறித்த வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள 36 மத்திய நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.