யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே அத்தியாவசிய பொருட்கள் விநியோம் செய்யும் பாரவூர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு மாகாண சுகாதார பிரிவு புதிய கட்டுப்பாடு..
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு திங்கள் கிழமை முதல் புதிய சுகாதார நடைமுறை மாகாண சுகாதார திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து யாழ்.வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், இன்று மாலை யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் சுகாதார பிரிவுனருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான சேவையில் ஈடுபடும் பாரவூர்தி சாரதிகள்,உதவியாளர்கள் அனைவருக்கும் புதிய சுகாதார நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடயம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக,
நாளை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் - கொழும்பு இடையல் சேவையில் ஈடுபடும் அனைத்து பாரவூர்தி உரிமையாளர்கள், சாரதி, உதவியாளர்களை யாழ்.வணிகர் கழகத்தில் ஒன்று கூடுமாறு கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.