SuperTopAds

மக்களே அவதானம்.. நாடு முழுவதும் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்..! சுகாதார நடைமுறைகளை மீறினால் உடன் கைது..

ஆசிரியர் - Editor I

முக கவசம் அணியாமை மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குற்றங்களுக்காக கடந்த 24 மணித்தியாலங்களில் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 158 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சுகாதார உத்தரவுகளை அமுல்படுத்துவதற்காக நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே தனிமைப்படுத்தல் சுகாதார உத்தரவுகளை மீறும் நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள். 

குற்றவாளிகள் எனக் கருதப்படும் சந்தேக நபர்களுக்கு 10,000 ரூபா அபராதமும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.