15ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை வெளியேற தடை..! உள்நுழையும் பேருந்து சேவைகளும் 15ம் திகதி நள்ளிரவுவரை முடக்கம், இராணுவ தளபதி அறிவிப்பு..
எதிர்வரும் 15ம் திகதிவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேற தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதியும், கொவிட் 19 தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அதேநேரம், மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.