வீட்டில் உயிரிழக்கும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாவது மிக ஆபத்தான நிலையாகும்..! சமூகத்திலிருந்தே அவர்களுக்கு தொற்று, மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I

இலங்கையில் இந்த மாதத்தில் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கூறியிருக்கும் கூறியிருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்திய நிபுணர் ஹரித்த அளுத்கே, வீட்டில் உயிரிழக்கும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகின்றது. 

அவர்களுக்கு கொரோனா தொற்று சமூகத்திலிருந்தே பரவியிருக்கின்றது. இந்த நிலமை மிக ஆபத்தானதும் பாரதுாரமானதுமான நிலமையாகும். இது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. எனவும் ஹரித்த அலுத்கே தொிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

வீடுகளில் உயிரிழந்த பலருக்கு மரணத்தின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு சமூகத்திலிருந்தே தொற்று பரவியிருக்கின்றது. இது ஆபத்தான மற்றும் பாரதுாரமான நிலையாகும். நாட்டில் 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய சிலர் தனிமைப்படுத்தலில் இருந்து அடுத்த சில நாட்களில் சமூகத்துடன் இணையவுள்ளனர். அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாமலேயே சமூகத்தில் இணைக்கப்படவிருக்கின்றனர். இதுவும் மிக ஆபத்தான நிலமையாகும். 

காரணம் கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிலர் சமூகத்துடன் இணைக்கப்படவிருந்த நிலையில் நடைபெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே நிலமை பாதகமாகவே உள்ளது. என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு