SuperTopAds

27 வயதான இளைஞனின் மரணத்தை கொரோனா மரண பட்டியலில் இருந்து நீக்கியது சுகாதார அமைச்சு..! காரணம் இதுதான்..

ஆசிரியர் - Editor I

இன்றைய தினம் 22வது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டதை கொரோனா மரண பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. 

27 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மரணத்தின் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 22வது கொரோனா மரணமாக சுகாதார அமைச்சு காலையில் அறிவித்திருந்தது. எனினும் தொற்றுநோய் ஆய்வு பிரிவு அதனை கொரோனா மரணமாக கருத முடியாது என கூறியுள்ளது. 

எனவே கொரோனா மரண பட்டியலில் இருந்து 22வது மரணத்தை சுகாதார அமைச்சு நீக்கியிருக்கின்றது.