SuperTopAds

10 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை..! நம்பிக்கை தரும் வகையில் எதுவுமில்லை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 

மொத்தம் 10105 ஆக உயர்ந்திருக்கின்றது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தற்போதைய நிலவரம் நம்பிக்கை தரும் வகையில் இல்லை. 

என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கொழும்புமாநகரசபை எல்லைக்குள் பல நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோகண 

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த கரிசனைகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ளார். பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவது மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாகியுள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பிவேளையே பிசிஆர் சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த இயந்திரமொன்று தற்போது பழுதடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபைக்குள் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் 

அவர்களை சோதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.எனவும் அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினமாக காணப்படுகின்றது.

குறிப்பாக மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.