பொது சுகாதார பரிசோதகர்கள் PHI வேஷத்தில் வீடு புகுந்த கொள்ளை கும்பல், போலி பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தி, துாக்க மாத்திரை கொடுத்து துணிகர கொள்ளை..
பொது சுகாதார பரிசோதகர்கள்போல் வேஷம் போட்டு வீடொன்றுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்தவர்களுக்கு போலியான பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தியதுடன், துாக்கமாத்திரை கொடுத்து வீட்டிலிருந்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளது.
இந்த சம்பவம் குருநாகல் மஹாவா பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.