இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அவசரகால சட்ட அறிவிப்பு தொடர்பிலேயே இந்த நாடுகள் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து தமது நாடுகளின் பிரஜைகளுக்கு இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பிரித்தானியா தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத் தல் வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவும் தமது நாட்டு பிரஜைகளுக்கு இத்தகைய அறிவுறுத்தலை விடுத்துள்ளதுடன் கனடா வும் தனது நாட்டு மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.