சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தமிழ் பிரதேசத்திற்கு பிரதி அமைச்சர் ஹரிஸின் அழைப்பின்பேரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்
கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தில் சூறாவளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (04)/விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது பிரதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்ட வீடுகளையும் மக்களையும் பார்வையிட்டதுடன் மக்களின் உடன் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் ,பாதிக்கப்பட்ட வீடுகளையும் உடன் திருத்துவதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுவதோடு அத்தியாவசிய தேவைகளையும் உடனடியாக நிறைவு செய்து கொடுக்கப்பட்டது
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர்,அலிசாஹிர் மெளலானா, கட்சியின் பிரதி செயலாளர் மன்ஸூர் ஏ காதர்,கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் லவனாதன் பிராந்திய நீர் வளங்கள் முகாமையாளர் எச்.ஹரீம் உள்ளீட பலர் கலந்து கொண்டனர்