SuperTopAds

மோடியின் கையை வெட்ட காத்திருக்கும் பீகார் மக்கள்! கோபத்தில் ரப்ரி தேவி.!

ஆசிரியர் - Editor II
மோடியின் கையை வெட்ட காத்திருக்கும் பீகார் மக்கள்! கோபத்தில் ரப்ரி தேவி.!

பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகார் மக்கள் தயாராக உள்ளனர் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ரப்ரி தேவி பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் முன்னாள் முதலமைச்சர் ரப்ரி தேவி பேசியதாவது: பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகார் மக்கள் தயாராக உள்ளதாக கூறினார்.

பிரதமர் மோடியை குற்றம்சாட்டி அவருக்கு எதிராக விரலை நீட்டுபவர்களின் விரல்களையும், கையையும் சேர்த்து வெட்ட வேண்டும்.

பீகார் மாநில பா.ஜ.க. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நித்யானந்த ராய் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ரப்ரி தேவி, மோடியை குற்றம்சாட்டி விரலை நீட்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்பதா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அப்படி செய்து பாருங்கள், நாட்டில் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்கள் எதுவும் கூற மாட்டார்களா? பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகாரில் பல மக்கள் தயாராக உள்ளனர்.

இதற்காக மக்களை அவர்கள் சிறையில் தள்ளலாம். பீகார் மக்கள் ஒன்றாக சேர்ந்து சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.