வழக்கறிஞர்மீது தாக்குதல்! நகைச்சுவை நடிகர் சந்தானம் தலை மறைவு! வலைவீசித் தேடும் போலிஸ்!!
தொழில் பங்குதாரரும் வழக்கறிஞருமான சண்முகசுந்தரத்தை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் தலைமறைவாகி விட்டதால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் சந்தானம் வளசரவாக்கத்தைச் சேர்ந்த சண்முகத்துடன் இணைந்து அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் திருமண மண்டபம் கட்டுவதற்காக ரூபா 3 கோடி முற்பணமாக கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் பணத்தை வாங்கிவிட்டு கட்டம் கட்ட காலதாமதம் ஆகியதால் சந்தானம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பணத்தை தர சண்முகசுந்தரம் மறுத்து விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறி சண்முகசுந்தரத்தை சந்தானம் தாக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுசம்பந்தமாக சண்முகசுந்தரம் கொடுத்திருந்த முறைப்பாட்டை விசாரிப்பதற்கு போலிஸ் சந்தானத்தை தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.