சிரியாவில் ஐந்து லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கிய அப்பா- மகன்: - நடந்தது என்ன?
சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டு போருக்கு முக்கிய காரணம் அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியே என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரியாவில் 1960 தொடக்கத்தில் ஹபீஸ் அல் அசாத் என்பவரின் கீழ் ஒற்றை ஆட்சி முறை வழக்கத்துக்கு வந்தது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போன்று நடத்தி வந்த அவருக்கு எதிராக கலக குரல்கள் எழுந்தது.
சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவினர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். இவ்வாறு இருக்க 1998 தொடக்கத்தில் ஹபீஸ் ஆசாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார். ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத் அரசியல் தொடர்பில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார். இதனிடையே 2000 ஆம் ஆண்டு ஹபீஸ் மரணமடையவே, ரிரியாவின் ஆட்சி பொறுப்புக்கு பஷர் அல் ஆசாத் வந்தார். இந்த நிலையில் சிரியாவில் சன்னி ஷியா பிரச்னை உச்சத்தில் வந்தது. அரசின் முக்கிய பொறுப்புகளில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். ஹபீஸ் அல் அசாத் 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார், மகன் 18 வருடமாக ஆட்சி செய்து வருகிறார்.
இந்த 48 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனத்தையும் வைத்திருந்தது, இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். கிளர்ச்சியாளர்களை நசுக்கும் வேலையில் இறங்கிய ஆசாத் அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், போர் உக்கிரம் அடைந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.