SuperTopAds

டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்: - வடகொரிய அதிபர் எச்சரிக்கை

ஆசிரியர் - Editor I
டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்: - வடகொரிய அதிபர் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள், அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்’ என வடகொரிய அதிபர் கிம் எச்சரித்துள்ளார். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. 

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.

இதையடுத்து, வடகொரிய அதிபர் விடுத்த அறிக்கை ஒன்றில், ’அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் செயல்படுமானால், ஜப்பான் விரைவில் ஒரு நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்கே பேரழிவைத் தரும். பின்னர், வடகொரியாவின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியது வரும்” என்றும் கிம் எச்சரித்துள்ளார்.